புதுடில்லி: அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியாவின் சொத்து மதிப்பு 6.4 டிரில்லியன் டாலராக உயரும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து வளம் 6.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கிரடிட் சூஸ் குளோபல் வெல்த் அறிக்கை தெரிவித்துள்ளது. இது தற்போதுள்ள மதிப்பை விட 2 மடங்கு அதிகமாகும். தற்போது இந்தியாவின் சொத்து மதிப்பு 3.5 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. 2015ல் இது 6.4 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்து விடும். உலகளாவிய சொத்து மதிப்பு 195 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இது 2015ல் 135 டிரில்லியன் டாலர்களாக எகிறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவிலான கோடீஸ்வரர்களைக் கொண்ட கண்டமாக ஆசியாதான் திகழ்கிறதாம். ஐரோப்பாவை விட ஆசியா பசிபிக் பிராந்தியத்தில்தான் பெருமளவில் கோடீஸ்வரர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1000 ஆகும். இவர்களில் வட அமெரிக்காவில் 500 பேரும், ஆசியா பசிபிக்கில் 245 பேரும் உள்ளனர். ஐரோப்பாவில் 230 பேர் மட்டுமே உள்ளனர். |
வடகரை பழம்மொழி
செவ்வாய், 12 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக